Saturday 24 November 2012

கார்த்திகை தீபத்திருநாள்.

இதோ அடுத்த விழா. இல்லங்களில் எல்லாம் தீப ஒளி பரவவிடும் தீபத்திருவிழா. கார்த்திகைத் திங்கள் 12 ஆம் நாள் (நவம்பர் 27) நம் வீட்டிலும் விளக்கொளி பரப்பப் போகிறது. ஐந்து பூதங்களின் வடிவாய் ஒளி தோன்றுவது போலவே உயிர்களும் தோன்றுகின்றன என உணர்த்தும் பெருநாள் கார்த்திகை தீபத்திருநாள். பிரணவ மந்திரத்தை உரைத்த சுப்பிரமணிய கடவுளுக்கு மரியாதை செலுத்த தீபங்கள் ஏற்றப்படுகின்றன என்பது ஆன்றோர் கூற்று. ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த ஆறுமுகப்பெருமானின் பிறப்பை இந்த தீபம் குறிப்பதாகவும் சொல்வர். இதனை மஹாபலி-வாமணன் கதையை தொடர்ந்து விஷ்ணு தீபம் என்றும் அழைப்பர். மஹிசாசுர வதத்திற்கு பிறகு பார்வதி தேவி சிவபெருமானுடன் அவர் சகோதரரின் உதவியில் மீண்டும் இணைந்த நாள் இந்த தீபத்திருநாள். திருவண்ணாமலை பரணி தீப விளக்கேற்றத்துடன் தொடங்கும் தேவரம் இசைக்க விழா தொடங்கும். இது பாடல் பெற்ற தளம். இந்த தளத்தைப் பற்றி திருநாவுக்கரசர் இரண்டு பாடலும், திருஞானசம்பந்தர் இரண்டு பாடலும் மாணிக்கவாசரும் பாடியுள்ளனர். திருவெம்பாவை பாடல்கள் தாய்லாந்து மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் போது பாடப்படுகின்றன என்பது இனிய தகவல்..
 (மேலே குறிப்பிட்டவை மொழியாக்கம் செய்யப்பட்டவை.
http://www.thehindu.com/arts/history-and-culture/lead-kindly-light/article4122981.ece)

No comments:

Post a Comment