Wednesday 25 December 2019

இங்கு திரையிசைப் பாடல்கள் கிழித்துத் தொங்க விடப்படும் 😑😑

மு.கு. : தல .ஆர்.ரகுமான்என்ன மன்னிச்சிடுங்கநல்ல இசை மெட்டுல அமஞ்ச பாடல் தான்ஆனா வரிகள்நல்லா இல்லையேநான் என்ன செய்ய!!

சிறு வயதில் ஆகா ஓகோ என்று கேட்ட பாடல்கள் சிலவற்றை இப்போது கேட்டால் ‘இதத்தான் அப்படிஇரசிச்சோமா... ச்சை’ அப்படி இருக்கும் அல்லவாஇது அதைவிட மோசம்

சில பாட்டைக் கேட்கும் போதே இது இந்த வகை தான் என்றிருக்கும்அவை மோசமாயிருந்தாலும் எனக்கு ஒருகவலையும் இல்லைஆனால் சில பாடல்களில் தான் நாசூக்காக உள்குத்து வைப்பார்கள்தில்லானாதில்லானா பாட்டில் ‘கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு’ என்று அரசியல் வைத்தது போல.

நான் பேசப்போகும் அந்தப் பாடலின் முடிவில், ‘அன்பான சர்வாதிகாரம்’ என்று நம் அண்ணன் சொன்னது போல, ‘இப்படிக்கு அன்புள்ள ஆணாதிக்கம்’ என்று எழுதிக்கொள்ளலாம்அப்படியொரு ஆணாதிக்கப் பாடல்மன்னிக்கவும் ‘அன்புள்ள’ ஆணாதிக்கப் பாடல்

நதியேநதியேகாதல் நதியே நீயும் பெண் தானே!’ இந்தப் பாடல் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘மூங்கில் காடுகளே’ பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தால் அடுத்து இந்தப் பாடல் வரும்கேட்டால் இயற்கையைஇரசிக்கும் பாட்டாம்இயற்கையை மட்டும் அந்தப் பாட்டில் இரசித்திருந்தால் தான் பரவாயில்லையே.

போயும் போயும் இந்தப் பாடலை சிலேடை என்று என் தமிழ் மனம் ஒரு காலத்தில் சிலாகித்ததை நினைத்தால்தான் செம கடுப்பாக இருக்கிறது

//நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே// 
சரி சரிஅண்ணன் காட்டாற்று வெள்ளம் போலப் புரண்டு வரும் பெண்களின் ஆற்றல் பற்றிப் பேசப் போகிறார்போல என்று நாம் நினைப்போம்.

//நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ// 
அடடேஅடடேஅட்டட்டட்டேஏன்பாஉங்களுக்கு இந்த படிச்சா மருத்துவர்பாடம் சொல்லிக்கொடுக்கிறஆசிரியர்விமான ஓட்டுனர் இவங்கெல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டாங்களாஅது சரிபொண்ணுனாசமஞ்சு மணந்து சமைச்சு கொட்டி சாகனும்குழந்தை பெத்துக்காம தத்தெடுக்குற பெண்கள் எல்லாம் தாயேஇல்லையாஎன்னங்கயா உங்க நியாயம்

// வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே// 
// வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே//
பெண்களுக்கு இருக்கிறது இரண்டு குணங்கள் தான்வளைவுகள் மேடு பள்ள இதையெல்லாம் மறச்சுட்டுபாட்டுபடிச்சிட்டு இருக்கிறது 😡

//தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே//
இதுக்கு எதுக்கு நீங்க பாட்டெல்லாம் எழுதுனும்

நாகரிகங்கள் தோன்றி மறையக் காரணமான ஆறுகளோடு ஒப்பிட ஆயிரம் காரணம் இருந்தாலும்இவங்கசொல்ற காரணத்த எல்லாம் கொஞ்சம் பாருங்களேன்இதுக்கு ஒரு சொம்புத் தண்ணியோட ஒப்பிடவேண்டியது தானேஎதுக்கு நதி கிதினு எல்லாம் பேசனும்

//நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்// கடைசியா ஒப்புக்குசப்பாணியா இந்த வரிநம்ம தலைவர் படம் முழுக்க சாதிப் பாட்ட வச்சு அதப் போற்றிப் பாடிட்டுகடைசியாபுள்ள குட்டிய படிக்க வைக்க சொல்லுவாரேஅந்த மாதிரி

அது சரி இந்தப் படத்தில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்திரையரங்கில் குடும்பத்தோடு படம் கூட பார்க்கவிடாமல் பின்னால் வந்து தொந்தரவு செய்பவன் செய்பவன் மேல் தான் தலைவிக்கு காதல் வரும் (Stalking). கணவர் இறந்து அவளுக்கு மருமணம் ஆக வேண்டும்குழந்தை வேண்டும்அதனால் கணவன் திருமணமானஅன்றே இறந்துவிடுவான்அவள் குழந்தையைத் தத்தெடுத்து விதவையாக வளர்ப்பாள். ‘எங்கவா பூண்டுவெங்காயம் சாப்பிட மாட்டா’ என்ற மாமியார் வந்து அழைத்தவுடன் அந்தப் பெண்ணும் போய்விடுவார். ‘பூண்டுவெங்காயம் சாப்பிடாத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா?’ என்று கொஞ்சமும் யோசிக்காமல்மாமியாருடன் போய்விடுவார்பிறகு அவர் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்துகொள்வார்இதைத்தான்முதல் பாடலிலேயே ‘தலைவனிடம் பாயாகிசேயிடம் தாயாகிகாய்ச்சால் வந்தால் நோயாகிநீயாகி நாயாகி’ என்றெல்லாம் foreshadowing செய்திருப்பார் இயக்குனர்.

அடிப்படை இது தான்புரட்சிகள் எதுவும் நடந்துவிடக்கூடாதுபெண்கள் முன்னேற்றம் என்றெல்லாம் எதுவும்நடந்துவிடவே கூடாதுகாடாற்று வெள்ளமாகஅணையை நிறைக்கும் ஆறாக எல்லாம் பெண்கள் ஆகிவிடவேகூடாதுஇந்தக்கருத்துக்கள் எல்லாம் வளர்ந்துவிட்டால் என்ன செய்வதுஅதற்குத் தான் இந்த அன்புள்ளஆணாதிக்கம்ஆணாதிக்கத்தை அனைவரும் இனங்கண்டு விடுவர்ஆனால் இது அனைவரின் பார்வையையும்தப்பிவிடும்

இதெல்லாம் உங்களோட அழகுஇதெல்லாம் மட்டும் தான் உங்களோட அழகு’ என்று மீண்டும் மீண்டும்பிற்போக்குத்தனத்தைப் பதியவைத்துக் கொண்டிருப்பதே இவர்கள் வேலைஇந்தப் பாட்டின் இசையை மட்டும்வைத்துக்கொண்டு இந்த வரிக் குப்பையை எங்காவது தூரக் கொட்டிவிட்டால் நன்றாக இருக்கும்.