Thursday 23 May 2013

தஞ்சைபெரியகோயிலும் அரிய தகவலும்-2 (நந்தி)















பெரிய கோயிலில் பக்தர்கள் இப்போது தரிசிக்கும் மகாநந்தி, இராசராசன் காலத்தியது அல்ல. அந்த நந்தி இப்போது தென்மாளிகைச் சுற்றில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் நந்தியை கி.பி. 1550 களில் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரும், அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து எழுப்பியுள்ளனர்.

பதினாறு கால் மண்டபத்தில் மாபெரும் உருவமாக அமைந்துள்ளது இந்த நந்தி. துல்லியமாக பத்தொன்பதரை அடி நீளமும், எட்டே கால் அடி அகலமும், பன்னிரெண்டடி உயரமும் உடைய மகாநந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு.

No comments:

Post a Comment