Sunday 9 December 2012

இனியவை நாற்பது..பாடல் 6


6. ஆற்றுந் துணையால் அறஞ்செய்கைமுன்இனிதே
  பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
  வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
  காப்படையக் கோடல் இனிது.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது.
பதவுரை 
ஆற்றுந் துணையால் - கூடிய மட்டும்
அறஞ்செய்கைதருமம் செய்தல்
முன் இனிது - மிக இனிது
பாற்பட்டார் -  நல்ல ஒழுக்கம் உடைய பெரியவர்கள் 
கூறும் - சொல்லும்
பயம் மொழி - பயனுடைய சொல்லின்
மாண்புசிறந்த கருத்து 
இனிது.
வாய்ப்பு உடையர் ஆகி –  எல்லா நலன்களும் பெற்றவராய் இருந்தும் 
வலவைகள் அல்லாரை – தான் என்ற செருக்கு இல்லாதவரை 
காப்பு அடைய கோடல் -  துணையாகக்  கொள்ளுதல்
இனிது.
தெளிவுரை 
            அறம் என்பது நல்லதையே நினைப்பதும் நல்லனவற்றையே சொல்லுவதும் நல்லனவற்றையே செய்வதும் ஆகும். இத்தகைய அறத்தினை நம்மால் எல்லா நேரமும் வாழ்க்கையில் செய்ய முடியாது. இப்பபடிப்பட்ட நிலையிலும் நம்மால் முடிந்தவரை நல்லனவற்றையே நினைப்பதும் சொல்லுவதும் செய்வதும்  இனிமையானது. நல்ல குணமுடைய பெரியவர்கள் கூறுகின்ற பயனுடைய சொற்களில் உள்ள கருத்துகள் மிக இனிமையானது. கல்வி செல்வம் ஆண்மை அழகு அதிகாரம் என்று எல்லா நலன்களும் பெற்றிருந்தும் 'நான்' என்ற செருக்கு இல்லாதவராய் வாழ்பவரை நம் வாழ்வின் துணையாகக் கொள்வது இனிமையானது.6. ஆற்றுந் துணையால் அறஞ்செய்கைமுன்இனிதே
  பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
  வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
  காப்படையக் கோடல் இனிது.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது.
பதவுரை 
ஆற்றுந் துணையால் - கூடிய மட்டும்
அறஞ்செய்கைதருமம் செய்தல்
முன் இனிது - மிக இனிது
பாற்பட்டார் -  நல்ல ஒழுக்கம் உடைய பெரியவர்கள் 
கூறும் - சொல்லும்
பயம் மொழி - பயனுடைய சொல்லின்
மாண்புசிறந்த கருத்து 
இனிது.
வாய்ப்பு உடையர் ஆகி –  எல்லா நலன்களும் பெற்றவராய் இருந்தும் 
வலவைகள் அல்லாரை – தான் என்ற செருக்கு இல்லாதவரை 
காப்பு அடைய கோடல் -  துணையாகக்  கொள்ளுதல்
இனிது.
தெளிவுரை 
            அறம் என்பது நல்லதையே நினைப்பதும் நல்லனவற்றையே சொல்லுவதும் நல்லனவற்றையே செய்வதும் ஆகும். இத்தகைய அறத்தினை நம்மால் எல்லா நேரமும் வாழ்க்கையில் செய்ய முடியாது. இப்பபடிப்பட்ட நிலையிலும் நம்மால் முடிந்தவரை நல்லனவற்றையே நினைப்பதும் சொல்லுவதும் செய்வதும்  இனிமையானது. நல்ல குணமுடைய பெரியவர்கள் கூறுகின்ற பயனுடைய சொற்களில் உள்ள கருத்துகள் மிக இனிமையானது. கல்வி செல்வம் ஆண்மை அழகு அதிகாரம் என்று எல்லா நலன்களும் பெற்றிருந்தும் 'நான்' என்ற செருக்கு இல்லாதவராய் வாழ்பவரை நம் வாழ்வின் துணையாகக் கொள்வது இனிமையானது.

2 comments: