Showing posts with label இனியவை நாற்பது. Show all posts
Showing posts with label இனியவை நாற்பது. Show all posts

Sunday, 9 December 2012

இனியவை நாற்பது..பாடல் 6


6. ஆற்றுந் துணையால் அறஞ்செய்கைமுன்இனிதே
  பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
  வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
  காப்படையக் கோடல் இனிது.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது.
பதவுரை 
ஆற்றுந் துணையால் - கூடிய மட்டும்
அறஞ்செய்கைதருமம் செய்தல்
முன் இனிது - மிக இனிது
பாற்பட்டார் -  நல்ல ஒழுக்கம் உடைய பெரியவர்கள் 
கூறும் - சொல்லும்
பயம் மொழி - பயனுடைய சொல்லின்
மாண்புசிறந்த கருத்து 
இனிது.
வாய்ப்பு உடையர் ஆகி –  எல்லா நலன்களும் பெற்றவராய் இருந்தும் 
வலவைகள் அல்லாரை – தான் என்ற செருக்கு இல்லாதவரை 
காப்பு அடைய கோடல் -  துணையாகக்  கொள்ளுதல்
இனிது.
தெளிவுரை 
            அறம் என்பது நல்லதையே நினைப்பதும் நல்லனவற்றையே சொல்லுவதும் நல்லனவற்றையே செய்வதும் ஆகும். இத்தகைய அறத்தினை நம்மால் எல்லா நேரமும் வாழ்க்கையில் செய்ய முடியாது. இப்பபடிப்பட்ட நிலையிலும் நம்மால் முடிந்தவரை நல்லனவற்றையே நினைப்பதும் சொல்லுவதும் செய்வதும்  இனிமையானது. நல்ல குணமுடைய பெரியவர்கள் கூறுகின்ற பயனுடைய சொற்களில் உள்ள கருத்துகள் மிக இனிமையானது. கல்வி செல்வம் ஆண்மை அழகு அதிகாரம் என்று எல்லா நலன்களும் பெற்றிருந்தும் 'நான்' என்ற செருக்கு இல்லாதவராய் வாழ்பவரை நம் வாழ்வின் துணையாகக் கொள்வது இனிமையானது.6. ஆற்றுந் துணையால் அறஞ்செய்கைமுன்இனிதே
  பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
  வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
  காப்படையக் கோடல் இனிது.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது.
பதவுரை 
ஆற்றுந் துணையால் - கூடிய மட்டும்
அறஞ்செய்கைதருமம் செய்தல்
முன் இனிது - மிக இனிது
பாற்பட்டார் -  நல்ல ஒழுக்கம் உடைய பெரியவர்கள் 
கூறும் - சொல்லும்
பயம் மொழி - பயனுடைய சொல்லின்
மாண்புசிறந்த கருத்து 
இனிது.
வாய்ப்பு உடையர் ஆகி –  எல்லா நலன்களும் பெற்றவராய் இருந்தும் 
வலவைகள் அல்லாரை – தான் என்ற செருக்கு இல்லாதவரை 
காப்பு அடைய கோடல் -  துணையாகக்  கொள்ளுதல்
இனிது.
தெளிவுரை 
            அறம் என்பது நல்லதையே நினைப்பதும் நல்லனவற்றையே சொல்லுவதும் நல்லனவற்றையே செய்வதும் ஆகும். இத்தகைய அறத்தினை நம்மால் எல்லா நேரமும் வாழ்க்கையில் செய்ய முடியாது. இப்பபடிப்பட்ட நிலையிலும் நம்மால் முடிந்தவரை நல்லனவற்றையே நினைப்பதும் சொல்லுவதும் செய்வதும்  இனிமையானது. நல்ல குணமுடைய பெரியவர்கள் கூறுகின்ற பயனுடைய சொற்களில் உள்ள கருத்துகள் மிக இனிமையானது. கல்வி செல்வம் ஆண்மை அழகு அதிகாரம் என்று எல்லா நலன்களும் பெற்றிருந்தும் 'நான்' என்ற செருக்கு இல்லாதவராய் வாழ்பவரை நம் வாழ்வின் துணையாகக் கொள்வது இனிமையானது.

Saturday, 8 December 2012

இனியவை நாற்பது..பாடல் 5


5. கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
  செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
  எய்துந் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
  பொல்லாங் குரையாமை நன்கு.
சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 

கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,
செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,
எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு.
பதவுரை 
கொல்லாமை கொலை செய்யாமை 
முன் இனிது - மிக இனிது
கோல் கோடி - நடுவு நிலைமை (எவர் பக்கமும் சேராமல் நேர்மையாக நிற்து) தவறி 
மாராயம் செய்யாமை - சிறப்பு செய்யாமை 
முன் இனிது - மிக இனிது
செங்கோலன் ஆகுதல்நாட்டை ஆள்பவன் நேர்மையாளனாக இருப்பது 
முன்னினிது - மிக இனிது
யார் மாட்டும்யாவரிடத்தும்
எய்தும் திறத்தால்-  கூடியமட்டில்
பொல்லாங்கு உரையாமை - (பிறர்மீது) குற்றங்கூறாமை,
நன்குஇனிது - மிக இனிது
என்ப - என்பர் (மேலோர்)
தெளிவுரை 
          பிற உயிர்களைக்  கொல்லாமை இனிமையானது. இங்கு உயிர் என்பது மனிதர்களை மட்டும் குறிப்பது அன்று. உலகில் உள்ள அனைத்தையும் குறிப்பது ஆகும். எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது இனிமையானது. நாட்டை ஆளுகிற தலைவர் அல்லது ஒரு பொறுப்பிலே உள்ளவர், எந்த காரணம் கொண்டும், சொந்த விருப்பு வெறுப்புகளை வைத்தும், ஆட்சி நடத்தவோ அல்லது நிர்வாகம் செய்யவோ கூடாது. அவ்வாறு இருப்பது இனிமையானது. அதாவது அனைத்து மக்களுக்கும் நல்லவராய்  நேர்மை உடையவராய் உள்ள தலைவரின் நேர்மையான ஆட்சி இனிமையானது. மனிதர்களுக்குக் குறிப்பாக உள்ள கெட்ட குணம் அடுத்தவரைப்  பற்றி தவறாக பேசுவது மற்றவரை குறை கூறுவது. இதை நாம் முழுமையாக தவிர்க்க முடியாது. அதனால் கூடிய வரை யாரைப் பற்றியும் தவறாக குறை கூறி பேசாமல் இருப்பது மிக இனிமையானது. ஒருவர் நம்மிடம் கூறியவற்றை எப்போது யாரிடமும் சொல்லாமல் புரளி பேசாமல் இருகிறோமோ அப்போது தான் சண்டைகள்  குறையும். அன்பு பெருகி இன்மை நிறையும்.
எளிமையாக சொன்னால் கொலை செய்யாமல் இருப்பதும் நேர்மையானவராய் நடப்பதும் ஒருவாய் இல்லாத நேரம் பார்த்து அவரை குறை கூறுவதைத் தவிர்ப்பதும்இனிமையிலும் இனிமையானது.