Saturday, 17 August 2013

தமிழ் மொழி பற்றி அறிஞர் பெருமக்களின் கருத்து.

முன் குறிப்பு:
பதிவு முழுவதையும் படியுங்கள். இதில் தமிழ் மொழி பற்றி பல அறிஞர்கள் கூறியது. நம் தமிழின் பழமை கண்டு பெருமை கண்டு கர்வம் கொள்ள வேண்டியது. இதில் தனிப்பட்ட எங்கள் கருத்து எதுவும் இல்லை. பெருமக்கள் சொன்னதன் தொகுப்பே இது. இந்தப் பதிவைக் கற்பனை சோடித்து பூதமாக்கி கடலில் இருந்து தமிழைக் கண்டெடுத்தேன் என்று கட்டுக்கதைகளை விட வேண்டாம்.  உள்ளதை உள்ளபடி உள்ளம் உவந்து உண்மையைப் பிறர்க்குப் பகிர்வோம்.

தமிழைப் பற்றிய பிற மொழியார் கருத்துக்கள்:


Tamil in its poetical form is more polished and exact than Greek and in both dialects with its borrowed treasure, more copious than Latin. - Dr.Winslow

Tamil Language is extraordinary in its subtlety and sense of Logic. - Dr.G.Slater

No human speech is more close and philosophic in its expression as an exponent of the mind than Tamil. - Perceival

The mode of callocating Tamil’s words follows the logical or intellectual order, more so than even Latin or Sanskrit. - Dr.Schmidt

In one department, at least, that of ethical epigrams Sanskrit has been outdone by Tamil. - Dr.Coldwell

Tamil is perhaps the only example of an ancient classical tongue, which has survived as a spoken language for more than 2500 years, with its basic structure, almost unchanged. - Encyclopedia Brittanica.

Tamil has been described as "the only language of contemporary India which is recognizably continuous with a classical past" and having "one of the richest literatures in the world". Tamil literature has existed for over 2000 years. The earliest epigraphic records found on rock edicts and hero stones date from around the 3rd century BCE. - Wikipedia

தமிழ்மொழி பற்றித் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களில் சிலவும் தமிழறிஞர் சிலரின் கருத்துக்களும் கீழே காண்க:

என்றுமுள தென்றமிழ்! – கம்பராமாயணம்

எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்! - பெரியபுராணம்.

நல்லதமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்! – நாலாயிரத் தெய்வியப் பனுவல்

கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?
– திருவிளையாடற் புராணம்

கொழி தமிழ்ப் பெருமையை யார் அறிவார்? - மதுரைக் கலம்பகம்

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன். - தமிழ்விடு தூது.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ். - தண்டியலங்காரம்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
- மனோன்மணீயம்

அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல் - புறநானூறு

ஆடல் பாடல் இசையே தமிழே - சிலப்பதிகாரம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)
எங்கும் காணோம்! - பாரதியார் பாடல்கள்

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்! – பாவேந்தர் பாடல்கள்

தமிழ்மொழிப் புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறமாட்டா.
- சிவஞானமுனிவர்

நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டுத் தூங்க வைத்ததும் தமிழ்... இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவுட்டுச் சமற்கிருதம் இலத்தீன் முதலிய அயல்மொழியைப் படிக்கிறார்கள். சுற்றத்தார்களை விட்டுவிட்டு அயலாரை நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். – நயனரசர் வேதநாயகர்

தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது - ஆபிரகாம் பண்டிதர்

தமிழ் உயர்தனிச்செம்மொழி – பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)

தமிழைப்போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலும் சொற் பரப்பைக் கொண்ட ஒரு மொழி நாம் அறிந்தவற்றுள் வேறின்று. - ஞானப்பிரகாசர்

எம்மொழிக்கும் ‘பித்ரு’ மொழி தமிழ் – இராமலிங்க வள்ளலார்

தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும்… தமிழ் வடக்கே போய் திரவிடமானது. திரவிடம் வடமேற்கே போய் ஆரியமாக மாறியது. அந்த ஆரியத்திலே ஒருபகுதியினர் கிரேக்கத்திற்கு இனமான ஒருமொழி பேசிய ஒருதொகுதி ஆரியர் இந்தியாவிற்கு வந்தனர். - தேவநேயப்பாவாணர்

தமிழர் தென்னாட்டின் பழங்குடி மக்கள். நாகரிக மாந்தன் தோன்றியது தென்னாடாகத்தான் இருக்க முடியும். – பி.டி. சீனிவாசஅய்யங்கார்

இங்கிருந்து (பழந் தமிழகத்திலிருந்து) போன தமிழர்தாம் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பினார்கள். – இராமச்சந்திரதீட்சிதர்.


தமிழ் மொழி வரலாறு பற்றிக் கூறும் நூல்கள்:

(நன்றி: மொழியும் இனமும் - முனைவர் மலையமான்)

‘தமிழகம் மக்கள் இனத்தின் தொட்டில்’ என்று செருமானிய அறிஞர் எக்கல் கூறியுள்ளார்.
1913-இல் தமிழ் உலகின் முதன்மொழி என்ற கருத்தை மொழிநூலறிஞர் மாகறல் கார்த்திகேயனார் கூறினார்.
1920-ஆம் ஆண்டளவில் இதே கருத்தை அறிஞர் கா.சுப்பிரமணியனார் மொழிநூல் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் என்ற நூலில் கூறினார்.
1930-40ஆம் ஆண்டுகளில் ஈழத்து நல்லூர் ஞானப்பிரகாச அடிகளார், ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ என்ற நூலில் இந்த உண்மையை அறிவித்துள்ளார்.

ஞால முதல்மொழி ஒன்றிருந்தது என்று ‘மாரிசு சுவாதசு’- Origin and Development of Language -என்ற நூலில் கூறினார்.
இதையே ‘கிரீன் பெர்கு’, ‘மெர்ரிட்ருகுலன்’ ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
அந்த மூலமொழி தமிழ் என்று தேவநேயப்பாவாணர் தம் ஆய்வு நூலான Primary Classical Language of the World –இல் கூறினார்.
அறிஞர் இளங்குமரனார், மதிவாணன் போன்ற இக்கால ஆய்வாளர் பலரும் தமிழே உலகின் முதன்மொழி என்கின்றனர்.

‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூலில் ஆபிரகாம் பண்டிதர், தமிழே உலக மொழிகளின் தாய் என்றார்.
மயோரிகளின் மொழியில் தமிழ்ச்சொற்கள் இருப்பதை மவ்லானாவும், பி.இராமநாதனும் கண்டு கூறினர்.
சுமத்ராவில் காரோபட்கு இனத்தவரின் மொழியில் தமிழ்ச்சொற்கள் உள்ளன.
கொரியா-திராவிடமொழி ஒப்பாய்வு நடத்திய எச்.பி.கூபர் என்பவர் கொரிய மொழியில் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று கூறினார்.

தமிழுக்கும் சீனமொழிக்கும் தொடர்புள்ளது என்று மாகறல் கார்த்திகேயனார் கூறியதை கடிகாசலம் நிறுவியுள்ளார்.
சப்பான் நாட்டு ‘கடகானா’ எழுத்துமுறை தமிழிலிருந்து பெறப்பட்டது என்று தி.நா.சுப்பிரமணியம் என்ற ஆய்வாளர் (கலைமகள் இதழில்) தெரிவித்தார்.
சப்பான் மொழியில் 500க்கும் மேல் தமிழ்ச்சொற்கள் இருப்பதைச் சுசுமுஓனோவும் பொற்கோவும் இணைந்தாய்ந்து கூறினர்.
வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கணா நாட்டுக் கணா மொழியில் 27 விழுக்காட்டுச் சொற்கள் தமிழ் என்று ஆய்வாளர் கூறினர்.
அய்ரோப்பாவின் அங்கேரி மொழியில் தமிழ்ச்சொற்கள் இருப்பதை ஆய்ந்து முத்துக்குமாரசாமி ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் எழுதினார்.
கிரேக்க இலத்தீன மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் இருப்பதை ஞானகிரி(நாடார்) நூலாக வெளியிட்டுள்ளார்.

இசுபெயின் நாட்டின் ‘பாசுகு’ மொழி தமிழுடன் ஒற்றுமை உடையதாயிருக்கின்றது. தமிழின் இடப் பெயர்களின் ஈறுகள் பல காணப்படுகின்றன.
அம்மா என்ற சொல் அதே வடிவிலும் திரிந்தும் 50க்கும் மேற்பட்ட மொழிகளில்வழக்கில் உள்ளதாக ப.அருளி ‘பெற்றோரைப் பற்றி’ நூலில் விளக்கினார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்ட கி.மு. 2000-கி.மு.1200 காலத்திய பிணக்குழிப் பொருள்கள் பாலத்தீனம், சைப்பிரசு, கிரீசு ஆகிய நாடுகளின் பிணக்குழிகளிலும் காணப்பட்டதை கே.கே.பிள்ளை ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூலில் எழுதினார்.
‘ஒரடோட்டசு’ என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் ‘கிரீட்’ தீவில் வாழ்ந்த மக்களைத் ‘தெமிலி’ என்றார். ‘தெமிலி’ என்பது தமிழரைக் குறிக்கும் என்று ந.சி. கந்தையா ஆய்ந்து எழுதினார்.
சிந்துசமவெளியில் கிடைத்த பழந்தமிழ்க் குறிகள் சுமேரியா, கிரீட், ஈசுடர் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டன.
தென் அமெரிக்காவின் ‘மாயன் நாகரிகம்’ தமிழ்நாகரிகத்துடன் தொடர்புடையது என ந.சஞ்சீவி தெரிவித்தார்.

ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் பழந்தமிழே வழங்கியது என்று சுனீத் குமார் சட்டர்சி ‘வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில் எழுதினார்.
‘ஒரு காலத்தில் வடந்தியா முழுவதும் திராவிட (தமிழ்) மொழி பேசப்பட்டது’ என்று அம்பேத்கர் untouchables என்ற நூலில் எழுதினார்.
தென்னிந்தியாவே திராவிடரின் தமிழரின் வலிமைப்புலமாக இருந்தாலும் மொழியாலும் பிறவற்றாலும் அவர்கள் பலுசித்தானம் முதல் வங்காளம் வரை பரவியிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்றார் எசு.கே.டே.
குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முன்பு மராத்திய நிலப்பகுதி திராவிடரின் (தமிழரின்) ஆட்சியின் கீழிருந்தது என்று மராத்திய அறிஞர் முனைவர் கட்ர Introduction to Modern Indian Linguistics என்ற நூலில் எழுதினார்.
சிந்தி மொழியில் 2000க்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று ஆய்வறிஞர் பர்சோ கித்வானி கூறினார்.
வங்க மொழியில் பல தமிழ்ச்சொற்கள் இருப்பதைச் சாந்தி நிகேதனத்தின் பேராசிரியர் முத்தையா ஆய்ந்துரைத்தார்.
தொடர் அமைப்பில் வடமொழியும் மற்ற இந்திய மொழிகளும் தமிழை ஒத்துள்ளன என்று சுனீத் குமார் சட்டர்சி கூறினார்.
இந்தி தொடர் அமைப்பைப் பற்றிக் கூறிய அறிஞர் மு.வ., ‘இந்தி ஆரிய உடை அணிந்த தமிழ்ப்பெண்’ என்றார்.
அரப்பா, மொகஞ்சதாரோ மக்களின் மொழி தமிழே என்றார் திருத்தந்தை ஈராசு.


பின் குறிப்பு.
இணையத் தேடல் வழி சேகரித்தத் தகவல். இணையத்தில் தமிழ் மொழி தொடர்பான தகவல் பகிரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

2 comments:

 1. அன்புடையீர்!

  தங்களது இப்பதிவை எமது "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலில் வெளியிட அனுமதிப்பீர்களா?

  விரிப்பு: https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  நன்றி.

  ReplyDelete
 2. அன்புடையீர்!

  தங்களது இப்பதிவை எமது "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலில் வெளியிட அனுமதிப்பீர்களா?

  விரிப்பு: https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  நன்றி.

  ReplyDelete