Friday 12 July 2013

கொங்கு மண்டல வட்டார வார்த்தைகள்

சில வார்த்தைகள் தமிழ்நாட்டில், தமிழில் பிறந்து தமிழிலேயே வழக்கொழிந்து போகின்றது. ஆங்கிலம் வருவதற்கு முன்பிருந்தே இவை இங்கு வழக்கில் இருந்தன. அப்படி வட்டார வழக்கில் இருக்கும், இருந்த வார்த்தைளில் சில இங்கு.

1. யேனம் - சமையல் பாத்திரங்களை இப்படிச் சொல்வார்கள்.
2. வட்டல் - உணவு சாப்பிடும் தட்டை மட்டும் வட்டல் என்பார்கள். மற்ற வட்ட வடிவில் அமைந்த எந்த தட்டுகளையும் இப்படிச் சொல்வதில்லை.
3. தாட்டிவிடு - அனுப்பிவை என்பது இதன் பொருள். ( தாட்டிவிட்டேன் - அனுப்பிவைத்தேன்)
4. சேந்துதல் - கிணற்றில் நீர் எடுப்பதை இப்படி சொல்வார்கள் (தண்ணீர் சேந்துனேன்)
5. மாட்டுதல் - சண்டை போடுதல், திட்டுதல் ( அம்மா என்ன மாட்டுவாங்க, திட்டுவாங்க என்ற பொருளில் இது வரும்)
6. சந்தகை - இடியாப்பம்.
7. கோசாப் பழம்- தர்ப்பூசனி.
மீண்டும் சில வார்த்தைகளோடு வருகிறேன்.

3 comments:

  1. ஒவுத்தினியம் (உபத்திரவம்)....நான் அடிக்கடி சொல்லும் வார்த்தை....:))

    ReplyDelete
  2. தெளுவு..(பதனீர்), சீமெண்ணை (கெரசின்)...

    ReplyDelete
  3. நன்றி அண்ணா... இன்னும் கொஞ்ச வார்த்தைகள் சேர்த்து வைத்துள்ளேன். அதோடு இவற்றையும் சேர்த்துக்கொள்கிறேன்.

    ReplyDelete