காதலை ஒருவன் ஒன்றே முக்கால் அடியில் சொல்லக் கிளம்புகிறான். அவனுக்கு மொழியென்பது எவ்வளவு கைகூட வேண்டும்! அவன் பயன்படுத்தும் சொற்கள் எவ்வளவு பொருள் பொருந்தியதாக இருக்க வேண்டும். சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு ஒரு கவிதை எழுதிட முடியுமா.. ஆழ்ந்த பொருள் தரும் சொல் தேடி எழுத வேண்டுமே.. வள்ளுவன் எழுதுகிறான்.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
தலைவன் புலம்புகிறான்.. அவன் நெஞ்சு யாரைக் கண்டு மயங்குகிறது என்றே தெரியாமல் தலைவன் புலம்புகிறான். " சரிப்பா தம்பி யாரைப் பார்த்து உன் நெஞ்சு மயங்குது?" என்று கேட்டாலும் அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் சொல்ல முற்படுகிறான்.
"அணங்கு போன்றவளோ, மயில் போன்றவளோ, ஆடும் காதணிகள் அணிந்த அழகிய பெண் போன்றவளோ, சொல்லத்தெரியவில்லையே?" என்கிறான். " என்னப்பா சொல்லத்தெரியாமயா இப்படி 'கவித கவித' என்று சொல்லும்படி அடுக்கிக்கொண்டிருக்கிறாய்?" என்று அவனைப் பார்த்து கேட்கலாம் என்றால் அது முடியவில்லை. காரணம் அவன் 'அணங்கு' என்று சொல்லிவிட்டான். இங்கு தான் தெளிவாகக் குழம்பியிருக்கிறான் தலைவன் என்று தெரிகிறது. 'அணங்கு' என்று சொல்கிறான்; அணங்குதல் என்பதற்கு விரும்புதல் வருத்துதல் என்று முரண்படுவதாக இரண்டு பொருளுண்டு. அணங்கு என்பவள் அழகிய அமைதி தெய்வமாகவும் இருக்கலாம், பிடுத்து வருத்தும் பெண் தெய்வமாகவும் இருக்கலாம்.
தோழன்: டேய் அணங்குனா, என்ன பொருள்ளடா சொல்லுற? வருத்துறாளா? இல்ல விரும்ப வைக்குறாளா?
தலைவன்: தெரியலையே மச்சி. தெரிஞ்சா ஏன் அவள அணங்குனு சொல்லப் போறேன்.
தோழன் : இவன் எப்படியும் லவ் பண்ணி அந்த பொண்ணோட அப்பாகிட்ட அடி வாங்கப் போறான்.
ஆமாம், அவன் சொல்வது நியாயம் தானே, அவன் கண்டு மயங்கியாது யாரை என்று தெரிந்திருந்தால் அவன் ஏன் அணங்கோ என்று புலம்பப்போகிறான்?
இப்படியான முரண்களால் அழகு பெற்ற பல திரையிசைப்பாடல்கள் இருக்கின்றன. கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் அப்படி முரண்களால் அமைந்த ஒரு பெண்குழந்தை பற்றிய பாடல். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளுவன் இப்பாடலில் இருக்கின்றான். கவிதையில் அவன் பாடும் பெண்ணை மட்டுமல்ல முதற்சொல்லையே தலைவன் கண்டு மயங்கி குழம்பியிருக்கிறான் என்பதற்கு அழகாய் தெரிவு செய்திருக்கிறான்.
நமக்கு இதெல்லாம் பிடித்த குணங்கள், இதெல்லாம் பிடிக்காத பண்புகள் என்று முன்முடிவுகள் எப்பொழுதும் இருக்கும், ஆனால் அவற்றைத் தகர்க்கும் விதமாய் ஒரு சிலரைப் பார்க்கும் போது மட்டும் மனம் குழம்பிக்கிடக்கும், அப்படி ஒருத்தியைப் பார்க்கும் போதும் தலைவன் இப்படித் தான் குழம்பியிருப்பான், தலைவியைப் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று தெரியாமல் இப்படித் தான் புலம்பியிருப்பான். அணங்கு என்ற சொல்லைப் புலவர் கையாண்டாதால் இப்படி அவன் படும்பாட்டைப் புரிந்துகொள்ள பல காரணங்களைக் கற்பிக்க முடிகிறது. பரிமாண வளர்ச்சி என்பது தமிழுக்கும் பொருந்தும். சொல் ஒவ்வொன்றும் வெறும் வெற்றான பொருள் கொள்ளாமல் மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் இருக்கின்றன. அத்தனை காதலையும் ஒன்னேமுக்கால் அடியில் சொல்லக்கிளம்பியவனுக்கு அணங்கு என்னும் ஒற்றைச் சொல் போதுமானதாய் இருக்கிறது.
பின்குறிப்பு:
நண்பரொருவர் எழுதிய பதிவில் நான் இட்ட மறுமொழியை அடுத்து எழுதிய விளக்கம் இது. கல்லூரிக்காதலர்கள் எப்படி குறளைப் படித்தால் உணர்வார்கள் என்று இரசிக்க வேண்டுமானால் காமத்துப்பால்- kaamathupaal அவரின் பக்கத்தை சென்று பார்க்கலாம்.

No comments:
Post a Comment