கிட்டி.
ஆடு கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் குச்சியின் பெயர் கிட்டி என்பதாகும்.
குறும்பு செய்யும் ஆடுகள் பட்டியைத்தாண்டுவதைத் தடுப்பதற்கு கட்டப்படுவது தான் இந்தக்கிட்டி. வேலியிலுள்ள சிறிய குறுகிய வழியில் ஆட்டால் வெளியில் வரமுடியாமல் இக்கிட்டியானது தடுத்துவிடும்.
இயந்திரங்களில் உலக்கையை உருளையில் இருந்து வெளிவராமல் தடுக்கும் உறுப்புகளுக்கு இப்பெயர் வைக்கலாம் அல்லவா?
இச்சொல்லின் மூலம் தெரியவில்லை. ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் குச்சிகளுக்கு கிட்டியெனப்பெயர் இருக்கலாம். கிடுகிட்டி என்றொரு இசைக்கருவியிருக்கிறது, அதில் இரு இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து கட்டியிருப்பர். படம் கீழே:
(படம்: இணையம்)
எலி பிடிக்கும் பொறி ஒன்றினுக்கும் கிட்டி எனப்பெயருண்டு. அப்பொறியிலும் இரண்டு குச்சிகள் இணைத்துக்கட்டப்பட்டிருக்கும். அதைப்பற்றி தி இந்துவில் வெளியான செய்தியையும் படத்தையும் கிழே காண்க.
இணைப்பு

கில்லி-தாண்டலின் இன்னொரு பெயர் கிட்டிப்புள். கில்லி/கிட்டி என்பது நீண்ட தடி என்னும் பொருளில் வந்திருக்கலாம்.
ReplyDelete(தென்னிலைக்கு அருகில் தான் எங்களூரும் இருக்கிறது).
மிக்க மகிழ்ச்சி ஐயா :) அங்கு உறவினர் ஒருவரை பார்க்கச்சென்றபோது எடுத்த படமிது.
Deleteகிட்டிப்புள் என்பது நினைவிற்கு வராமலே போய்விட்டது ஐயா.. இதை வைத்து பார்க்கும் போது தாங்கள் சொல்வது போல அதற்கு நீண்ட தடி என்று பொருளிருக்கலாம். இச்சொல் பற்றி தாங்கள் இன்னும் விளக்கினால் பயனுள்ளதாய் இருக்கும் ஐயா :)
Deleteஇங்கிருக்கும் அகரமுதலிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவை உங்களுக்குப் பெரிதும் உதவக்கூடும்.
Deletehttp://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil
அதில் ஃபெப்ரீசியசு-இல் "கிட்டி (p. 241) [ kiṭṭi ] , s. an instrument of torture in which the hands of a person are pressed between two sticks, கிட்டிக் கோல்;" என்று இருக்கிறது.
சென்னைப்பல்கலை.அகரமுதலியில்:
"கிட்டி¹ kiṭṭi
, n. < கிட்டு-. [K. M. kiṭṭi.] 1. Clamps used to press hands, feet, etc. in torture, to castrate bulls, to press out medicinal oils, etc.; இறுக்குங்கோல். கையுந் தாள்களுங் கிட்டியார்த்தார் (திருவிளை. நரிபரி. 9). 2. See கவரிறுக்கி. 3. Iron cramp; கொல்லர்கருவிவகை. (C. E. M.) 4. Pegs that confine the bullock's neck to the ends of the yoke in drawing carts, etc.; நுகமுளை. "
தஞ்சை வட்டாரத்திலும் இதற்கு பெயர் கிட்டி தான்ங்க.
ReplyDeleteஓ அப்படியா? அது பற்றி நான் அறிந்திருக்கவில்லை பாண்டியன் :)
Delete