முற்றுப் புள்ளிகளாலான வாக்கியம்
அது ஒரு கார் காலம்
இலக்கியம் பாடா கார்கில் காலம்....
மணந்தவன் போர்களத்தில், அழுவதா??? இல்லை
மகன் பிறந்த மகிழ்ச்சியில் சிரிப்பதா???
புரியாமல் புலம்பினால் பேதை
மணநாள் அன்று வருவதாய்ச் சொன்னான்,
தொலைபேசியில் தொடர்ந்தது தொலைந்தது
அவள் வாழ்நாள்.....
வீர நடையிட்டுச் சென்றவன்
அது ஒரு கார் காலம்
இலக்கியம் பாடா கார்கில் காலம்....
மணந்தவன் போர்களத்தில், அழுவதா??? இல்லை
மகன் பிறந்த மகிழ்ச்சியில் சிரிப்பதா???
புரியாமல் புலம்பினால் பேதை
மணநாள் அன்று வருவதாய்ச் சொன்னான்,
தொலைபேசியில் தொடர்ந்தது தொலைந்தது
அவள் வாழ்நாள்.....
வீர நடையிட்டுச் சென்றவன்
வீடு திரும்பினான்....
மாலையிட்டவன் கழுத்தில் இறுதிமாலை...
இட்டது யாரோ???
திருமதி தியாகி என்று பட்டம்
தந்தது தாய் நாடு!!!!
விதவை ஆகிவிட்டால் என்று அழுது
அடங்கியது தாய் வீடு!!!!
அவள் நெற்றியில் இட்ட ஒரு
புள்ளியை அழித்த பின்
போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசாங்கம்!!!!
வாக்கியங்கள் முடிக்கப்பட்டன...
பக்கங்கள் திருப்பப்பட்டன...
மகன் இன்று இராணுவத்தில்!!!!
முற்றுப்புள்ளியில் மறைந்தது அவள் வாழ்க்கை...
அர்த்தமற்றதாய் அல்ல! ஆழமுள்ளதாய்...
முற்றுப்புள்ளிகளாலான ஆனதொரு வாக்கியமாய்!!!!
சுபாஷினி....
படம்:http://sphotos.xx.fbcdn.net/hphotos-ash3/c0.25.403.403/p403x403/547454_438524676170726_1524008017_n.jpg
No comments:
Post a Comment