Saturday, 26 April 2014

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன ; பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன...

என்னது இப்படி ஒரு பதிவானு யோசிக்காதீங்க.
"அடடே இந்த எழுத்தையெல்லாம் எங்க எப்படி உச்சரிக்கனும்னு எழுதப் போறீங்க , சரியா? " அப்படினு கேட்ட அதுவும் இல்ல. இதெல்லாம் எங்க பயன்படுத்தனும் எப்படிப் பயன்படுத்தனும்னு சொல்றதுக்கு முன்னாடி இதுக்கெல்லாம் என்ன பெயர்னு சொல்லத் தான் இந்த பதிவு. (கலி முத்திடுச்சு).

பள்ளத்துக்கு வர 'ள' , குண்டு 'ல', ஒல்லிக்குச்சி 'ர' , ரெட்டச் சுழி 'ன' (சின்ன வயசுல ரொம்ப சேட்டை செஞ்சதுனால இதுக்கு ரெண்டு சுழியோ!!!)... மூனு சுழி "ண"... (நாலு சுழி போடற தமிழ் ஞானிகள் கூட சில பள்ளிகளில் இருப்பாங்க)... இப்படிப் பல nicknames கேட்டு ரொம்ப நொந்து போய் இதை எழுதுகிறேன்.

இவற்றையெல்லாம் எப்படிக் குறிப்பிட வேண்டும்???
இதோ இப்படித் தான்.

ல - தனி 'ல'கரம். (பாவம் மத்த ழ,ள கூட சேர விடாம வ வந்து இதத் தனியா பிரிச்சுடுச்சு. இதுத் தனியா இருக்கு)
ழ - சிறப்பு 'ழ'கரம். (தமிழுக்கே உரிய சிறப்பு.)
ள- பொது 'ள'கரம்.

ர - இடையியன 'ர'கரம்
ற - வல்லின 'ற'கரம்

ண - டண் 'ண'கரம் ( 'ட'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ந - தந் 'ந'கரம் ( 'த'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ன - றன் 'ன'கரம் ( 'ற'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)

இனிமேல் பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க.. மனசு வலிக்குது.


8 comments:

  1. தமிழுக்கே உரிய சிறப்பு தொடரட்டும்...

    ReplyDelete
  2. பள்ளியில் இதுபோன்று கற்பிப்பதில்லை. இது போன்று உணர்த்துவது அழகாக உள்ளது. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. Karpikirargal..koornthu kavanithirukka vendum..ilavarasu

      Delete
  3. என் மகளுக்கு கற்றுக்கொடுக்க உதவியது. நன்றி

    ReplyDelete
  4. ல,ள,ழ வேறுபாடு சொற்களில் எந்த இடத்தில் எந்த ல,ள ழ பயன்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எளய வழி சொல்லுங்கள். பிழையை தவிர்க்க

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    ReplyDelete