தாராசுரம் கோயிலின் சுற்று மண்டபத்தில் அமைந்த ஒரு படிக்கட்டில் அமைந்த சிற்பம் இது. ஒரு சிங்கம் யானையை விழுங்குவது போன்ற காட்சி. யானையை கொல்லும் அளவு பெரிய சிங்கமா?? ஒருவேளை வள்ளுவர் சொன்ன
"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்."
என்னும் குறளில் வரும் புலியைப் போல ஊக்கமுடைய அரிமாவாக இருக்கும். இந்த சிற்பம் அமைத்த காரணம் அதன் அடிப்படையில் அமைந்த சாராம்சம் எல்லாம் மறைந்தே போய்விட்டது. Dan Brown புதினங்களில் வரும் Robert Langdon போன்ற ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து அதன் காரண காரியங்களைத் தேடிக் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இருந்தும் ஒரு நான்கு படி கொண்ட படிக்கட்டின் கைபிடியில் எவ்வளவு நேர்த்தியான சிற்பம். ஆனால் சிற்பங்கள் எல்லாமே சற்று சிதிலமடைந்து தான் காணப்படுகின்றன. சிதிலமடைந்த நிலையிலேயே இவ்வளவு அழகாக இருக்கும் போதும், செதுக்கிய ஆண்டில் பார்க்கக் கண் கோடி தேவைப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment