Monday, 5 August 2013

ஒரு செய்யுளும் அதனைச் சுற்றி சோடிக்கப்பட்ட கற்பனையும்

"நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்."

இப்படியாகத் தொடங்கி அச்சு மாறாமல் அதே வரிகளைக் கொண்ட பதிவுகளை வெவ்வேறு படங்களுடன் தினமும் முகப் புத்தகம், வலைப்பூ என ஆதாரமற்ற பல இணையத் தளங்களில் காண்கிறோம். அதில் சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள். அவை அனைத்தும் ஒரு செய்யுளின் கரு, அதைத் தான் கற்பனை சோடித்துத் தங்கள் மதியை மயக்குகின்றனர்.
அந்தச் செய்யுள் இடம் பெற்ற நூல் இறையனார் களவியல் / இறையனார் அகப்பொருள் நூல். உரை எழுதியவர் தான் நக்கீரர், இந்த நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய சங்ககாலப் புலவர் நக்கீரரும் ஒருவர் அல்லர்.

அடுத்து. இந்த நூல் எழுதப்பட்டது 7-8 ஆம் நூற்றாண்டு.

ஆக 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு நூல் மட்டுமே நாம் 20,000 ஆண்டு பழமையானவர்கள் என்று கூறுவதற்கு உள்ள ஒரே ஆதாரம். பகிரும் முன் சற்று யோசியுங்கள். கல்வெட்டுக்களோ, இன்ன பிற சான்றுகளோ இல்லாத ஒரு செய்தியைப் பரப்பி, தமிழனை வெட்டிப் பெருமை பேசுபவன் என்று உலகம் ஏசச் செய்கிறார்கள். அந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்தியை சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த நூல் என்ன கூறுகிறதோ அந்த நூல் சொன்னதாக அதை அப்படியே இவர்கள் சொல்லலாம். கற்பனைகளையும் தவறான கருத்துக்களையும் உள் நுழைக்க வேண்டாம்.

No comments:

Post a Comment