5. கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துந் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு.
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துந் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு.
சீர் பிரிக்கப்பட்ட பாடல்
கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,
செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,
எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு.
செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,
எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு.
பதவுரை
கொல்லாமை – கொலை செய்யாமை
முன் இனிது - மிக இனிது
கோல் கோடி - நடுவு நிலைமை (எவர் பக்கமும் சேராமல் நேர்மையாக நிற்பது) தவறி
மாராயம் செய்யாமை
- சிறப்பு செய்யாமை
முன் இனிது - மிக இனிது
செங்கோலன் ஆகுதல் - நாட்டை ஆள்பவன் நேர்மையாளனாக இருப்பது
முன்னினிது - மிக இனிது
யார் மாட்டும் – யாவரிடத்தும்
எய்தும் திறத்தால்-
கூடியமட்டில்
பொல்லாங்கு உரையாமை - (பிறர்மீது) குற்றங்கூறாமை,
நன்குஇனிது - மிக இனிது
என்ப - என்பர் (மேலோர்)
தெளிவுரை
பிற உயிர்களைக் கொல்லாமை இனிமையானது. இங்கு உயிர் என்பது மனிதர்களை மட்டும் குறிப்பது அன்று. உலகில் உள்ள அனைத்தையும் குறிப்பது ஆகும். எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது இனிமையானது. நாட்டை ஆளுகிற தலைவர் அல்லது ஒரு பொறுப்பிலே உள்ளவர், எந்த காரணம் கொண்டும், சொந்த விருப்பு வெறுப்புகளை வைத்தும், ஆட்சி நடத்தவோ அல்லது நிர்வாகம் செய்யவோ கூடாது. அவ்வாறு இருப்பது இனிமையானது. அதாவது அனைத்து மக்களுக்கும் நல்லவராய் நேர்மை உடையவராய் உள்ள தலைவரின் நேர்மையான ஆட்சி இனிமையானது. மனிதர்களுக்குக் குறிப்பாக உள்ள கெட்ட குணம் அடுத்தவரைப் பற்றி தவறாக பேசுவது மற்றவரை குறை கூறுவது. இதை நாம் முழுமையாக தவிர்க்க முடியாது. அதனால் கூடிய வரை யாரைப் பற்றியும் தவறாக குறை கூறி பேசாமல் இருப்பது மிக இனிமையானது. ஒருவர் நம்மிடம் கூறியவற்றை எப்போது யாரிடமும் சொல்லாமல் புரளி பேசாமல் இருகிறோமோ அப்போது தான் சண்டைகள் குறையும். அன்பு பெருகி இன்மை நிறையும்.
எளிமையாக சொன்னால் கொலை செய்யாமல் இருப்பதும் நேர்மையானவராய் நடப்பதும் ஒருவாய் இல்லாத நேரம் பார்த்து அவரை குறை கூறுவதைத் தவிர்ப்பதும்இனிமையிலும் இனிமையானது.
No comments:
Post a Comment