Wednesday, 14 January 2015

நத்த மண்டலம்: (நெத்த மண்டலம் (அ) இரத்த மண்டலம்)

நத்த மண்டலம்: (நெத்த மண்டலம் (அ) இரத்த மண்டலம்)

வேறொரு திரியில் ஐயா செ. இரா. செல்வக்குமார் அவர்கள் எழுதிய பின்னூட்டத்தைத்தொடர்ந்து நத்த மண்டலம் என்றால் என்னவென்று தேடினேன்.
நத்த மண்டலம் என்பது பாம்பு வகையாம்; விரல் அளவு தடித்து இருக்குமாம்; நல்ல நிறமுடையவர்கள் உள்ளங்கை சிவந்தால் இருக்கும் நிறமாக இருக்குமாம்; "சுண்டுனா ரத்தம் வர அளவுக்கு சிவப்பு" என்று சொல்லும் நிறம் என்றார்கள். சிலர் அது ஒரு சான் தான் வளரும் என்கிறார்கள். ஓரிருவர் அது ஒரு அடி கூட வளரும் என்கிறார்கள். நச்சு தன்மை இருக்கும் பாம்பு. இரண்டாக வெட்டினால் கூட உயிர் போக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளுமாம். சற்று அதிகம் கண்ணில் படாத பாம்பு என்றே சொல்கின்றனர். அதன் மேல் மெலிதாக கறுப்பிலும் வெள்ளையிலும் வரிகள் இருக்கும். பார்க்க மண்டலம் மண்டலமாக தெரிவதால் தான் அதற்கு நத்த மண்டலம் என்று பெயர்.

இது எவ்வகைப்பாம்பு என்று தெரியவில்லை. பார்த்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.

மேலும் கேரளத்தில் கட்டுவிரியனை மண்டலி என்கிறார்கள். கன்னடத்தில் "கொளத்த மண்டலா" என்று ஒரு பாம்பைக்குறிப்பிடுகின்றனர். அது கடித்தால் தசை அழுகிவிடும், பாம்பின் தோலில் மண்டலம் மண்டலமாகத்தெரியும் அதனால் தான் அதற்கு அப்பெயர் என்று கேள்விப்பட்டேன். அது என்ன பாம்பு என்று சரியாகத்தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

7 comments:

  1. நாட்டார் வழக்காற்று தேடல்?

    ReplyDelete
    Replies
    1. ஆம்.சொல்லைத்தேடத் தொடங்கி பாம்பைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

      Delete
  2. இரத்த விரியனு சொல்லுவோம். இரண்டு முறை பாத்திருக்கிறேன். ஆரஞ்சு கலர்... வால் பகுதியில் கருப்பு கோடு. கொடிய விஷமுள்ள பாம்பு

    ReplyDelete