"பாத்திரம் அறிந்து பிச்சையிடு கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு"
இந்த பழமொழிக்கு நாம் பொதுவாக ஒரு பொருள் கொண்டிருப்போம். ஆனால் இதனை எப்படி பொருள் கொள்ள வேண்டும் தெரியுமா..
பா+திறம்- பாத்திறம். இது மருவி பாத்திரம் என்றானது. (பா என்றால் பாடல்/ செய்யுள் என்று பொருள்)
கோ+திறம்- கோத்திறம். இது மருவி கோத்திரம் என்றானது. (கோ என்றால் அரசன் என்று பொருள்)
ஆக, ஒரு அரசன் புலவரது பாடலைக் கொண்டு அவரது திறத்தை அறிந்து பொருள் கொடுக்க வேண்டும்.
தன் மகளை ஒரு அரசனின் திறத்தை ஆராய்ந்து பின்பே மணமுடித்துத் தர வேண்டும்.
கருத்தில் உதவி சோபனா.
arumai
ReplyDeleteஅருமை
ReplyDelete