Monday, 26 November 2012

உலகையே பாடவைத்து கின்னிஸ்'ல் இடம்பிடித்த பாடல்...


தமிழ் மொழியைப்பற்றி அறிந்துகொண்டிருக்கும் நாம், உலகில் வேறு என்னதான் நடக்கிறது என்று எட்டிப்பர்போமே...
உலகையே பாடவைத்து கின்னிஸ்'ல் இடம்பிடித்த பாடல்...





                 தென் கொரிய பாப் பாடகர் PSY பாடிய "Gangnam style" சனிக்கிழமை அன்று youtube'ன் மிக அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோ என்று அறிவிக்கப்பட்டது. அது கனடா'வின் இதயத்திருடன் எனப்படும் ஜஸ்டின் பீபெர் பாடிய "Baby" பாடலை விட 80 கோடி வியுஸ் அதிகமாகும்.
இந்த பாடலை பற்றி youtube , "இதுவரை பார்திடாதவாறு உலக அளவில் மிகப்பெரிய வெற்றி கண்டுவிட்டது" என்று புகழாரம் சூட்டுகிறது.
                  
                youtube'ன் மேலாளர் Kevin Allocca, சனிக்கிழமை அன்று," Gangnam style ஒரு நாள் ஒன்றுக்கு 70 லட்சம் முதல் ஒரு கோடி வரை பார்க்கப்பட்டு வருகிறது, ஆனால் ஜஸ்டின் பீபெர்'ன் "baby" ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 லட்சம் வரை பார்க்கப்பட்டு வருகிறது" என்ற புள்ளிவிவரத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் "baby" பாடல் இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டு அடைந்த வெற்றியை "Gangnam style" வெறும் நான்கே மாதங்களில் முறியடித்து, யாரும் அடைய முடியாத மைல்கல்லைத் தொட்டுள்ளது.

               இதைப்பற்றி PSY, CNN எடுத்த பேட்டி ஒன்றில், தனது அடுத்த பாடல், ஆங்கிலமும் கொரிய மொழியும் கலந்ததாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
                                                                                                                         வாழ்த்துக்கள் PSY...

No comments:

Post a Comment